ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 3,647 ஆக உயர்வு

பலி எண்ணிக்கை 3,647 ஆக உயர்வு

மாட்ரிட் , மார்ச் 26-

கொரோனா பரவ தொடங்கிய சீனாவில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. சீனாவில் இதுவரை 3,281 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி 6,820 என்ற பலி எண்ணிக்கையுடன் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளை தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலிக்கு அடுத்து ஸ்பெயின் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்பெயினில் நேற்றுவரை 3,434 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் ஒரே நாளில் (24ந்தேதி) 514 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். கடந்த திங்கட்கிழமையில் இருந்து 23.5 சதவீதம் என்ற அளவில் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதனால் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ், கூடுதலாக 2 வாரங்களுக்கு (ஏப்ரல் 11ந்தேதி வரை) அவசரகால நிலையை நீட்டிக்க நாடாளுமன்ற ஒப்புதலை கோர இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது. வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை விகிதம் உயர கூடும் என ஸ்பெயினின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

எனினும், சிகிச்சைக்கு பின் மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது அரசின் புள்ளி விவரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை 439 பேர் நலம் பெற்றனர் என அறிவித்த நிலையில், மீண்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 794ஐ அடைந்தது. இவர்களில் 60 சதவீதத்தினர் மாட்ரிட் நகரை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனை தொடர்ந்து இன்று சிகிச்சைக்கு பின் திரும்பியவர்கள் எண்ணிக்கை 5,367 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனாவுக்கு ஸ்பெயினில் இன்று வரை 49,515 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,647 பேர் பலியாகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here