வெளியுறவு அமைச்சர் நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கை செல்கிறார்

கோலாலம்பூர்:

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் இன்று முதல் 12ஆம் தேதி வரை நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு செல்கிறார்.

இச்சந்திப்பின்போது இலங்கை வெளியுறவு அமைச்சர் முகமது உவைஸ் முஹமட் அலி சப்ரியுடன் கலந்துரையாடுவார் என்றும், இது இரண்டு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை மரியாதை நிமிர்த்தமாக டாக்டர் ஜாம்ப்ரி சந்திப்பார் என்று மலேசிய வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சரின் இந்த உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் 11 அக்டோபர் 2023 அன்று 23வது இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேஷன் (IORA) அமைச்சர்கள் கூட்டத்தில் (COM) கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், இலங்கையானது உலகளவில் மலேசியாவின் 48வது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here