கோவிட் -19 தொற்றினால் 35 வயதான 24 ஆவது நபர் மரணம்

பெட்டாலிங் ஜெயா:
மலேசியாவில் 35 வயதான ஒருவர் கோவிட் -19 நோயினால் மரணடைந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இந்தோனேசியாவுக்குச் சென்ற மலேசியர் இந்த நபர் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மார்ச் 18 அன்று கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் அந்த நபருக்கு அறிகுறிகள் இருந்ததாக அறியப்படுகிறது. மார்ச் 20ஆம் தேதி நோய் தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டது.

அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (26/3) இரவு 9.30 மணியளவில் மரணடைந்தார். மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு சுகாதார அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது, நாட்டின் 1,056ஆவது நோயாளியாக அவர் அடையாளம் காணப்பட்டிருந்தார். மரணடைந்தவரின் குடும்பத்திற்கு சுகாதார அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்கள் கூட்டத்தின்போது மரணடைந்தவர் எந்த பாலினம் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here