COVID 19: 35,516 பேரிடம் சோதனை – 2,320 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது

கோவிட் -19 35,516 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2,320 பேர் அல்லது 6.5 விழுக்காட்டினருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 1,207 பேர் தப்ளிக் சமய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்று சுகாதரா அமைச்சு அண்மைய தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த 2,320 பேரில் பாதிக்கு மேற்பட்டோர் ஶ்ரீ பெட்டாலிங்கில் பிப்ரவரி 27ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களாவர்.

இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2,320 பேரில் 1,207 பேர் சமய நிகழ்ச்சியில் பங்கேற்வர்களாவர். 586 பேர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனவர்களாவர். 461 பேர் சந்தேகத்திற்கிடமான சம்பவங்களாகும்.

நடத்தப்பட்ட 35,316 கோவிட் -19 சோதனைகளில் 4,727 அல்லது சோதனை முடிவுகளின் பெரும்பகுதி உறுதி செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 8,469 பேரில் நான்கில் ஒரு பங்கு பேரின் முடிவுகள் நிலுவையில் உள்ளன.

கோவிட் 19 சோதனை மேற்கொள்ளப்பட்ட 24,727 பேருக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 8,913 (நெருங்கிய தொடர்பு), 6,648 (தப்ளிக் சமயநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்), 4,474 (சந்தேகத்தின் பெயரில் அனுமதிக்கப்பட்டவர்கள்), 4,226 (கோவிட் -19 கண்காணிப்பில் இருந்தவர்கள்), 366 (மனிதாபிமான பணி / தூதரகம்), 100 கப்பல் பயணங்கள் என அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளன என்பதும் இதன் பொருளாகும்.

சோதனை முடிவுகளுக்காக இன்னும் காத்திருக்கும் 8,469 பேரை பொறுத்தவரை தப்ளிக் சமய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 4,645, சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டவர்கள் பிரிவில் 2,491, 1,225 (நெருங்கிய தொடர்பு), 81 (மனிதாபினமான / தூதரகம்) மற்றும் 27 (கோவிட் -19 கண்காணிப்பு பணியில்) இருந்தவர்களாவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here