வழியில் நடக்கும் வழிப்பறிகள்

வழியில் நடக்கும் வழப்பறிகள்

கோலாலம்பூர்  , மார்ச்  30-

மக்கள்  நடமாட்டம்  என்பது வழிப்பறிக்குச்  சாதகமாக இருக்கிறதா என்ற சந்தேகம்  எழுந்திருக்கிறது.

இக்காலக்  கட்டத்தில்  வழிப்பறிச்  சம்பவங்கள்  நடந்திருக்கின்றன. நடப்பதற்கான  வாய்ப்புகளும்  இருக்கின்றன என்கிறார்  குற்றத்தடுப்பு அறக்கட்டளையின்  துணைத்தலைவர்  டான்ஸ்ரீ லீ லாம்  தை.

கிள்ளான் பகுதியில்  உள்ள மருந்தகத்தில்  இப்படியொரு சம்பவம்  நிகழ்ந்திருக்கிறது. இக்கட்டான நிலைமையில்  இப்படியொரு சம்பவம்  நிகழ்ந்திருக்கக் கூடாது. இது கொடூரமான செயலாகக்  கருதப்படுகிறது.

பொதுமக்கள்  எப்போதும்  முன்னெச்சரிகையுடன்  இருக்க வேண்டும். குறிப்பாக பொருட்கள்  வாங்கக் காத்திருக்கும்  நேரத்தில்   கைப்பேசியில்  மூழ்கியிருப்பதைத்  தவிர்க்க வேண்டும்.

இது போன்ற நேரத்தில்  ரோந்துப்பணிகள் மிக அவசியம்  என்கிறார்  அவர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here