ஷா ஆலம் , ஏப்ரல் 1-
முதலில் பாதுகாப்பு என்பதுதான் சிந்தனையாக இருக்கவேண்டும் என்ற அழுத்தத்தைக் கூறியிருக்கறார் சிலாங்கூர் மாநில சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா.
நோன்பு மாதம் தொடங்கும்போது மக்கள் நெருக்கத்தைத் தவிர்க்க இயலாது. சந்தைகளிலும் கூட்டம் குழுமியிருக்கும். மனித இடைவெளிக்குத் தடைபோடமுடியாமல் போகும். இது சாத்தியமானதாகக் கட்டுப்படுத்தமுடியாது.
ஏழை மக்களைக் கைவிட்டுவிடவும் முடியாது. அவர்களுக்கான ஸாக்காட் வழங்கபடுவதையும் தவிர்க்க முடியாது.
நோன்பு மாதத்தில் தொழுகைகள் தொடர்ந்து நடைபெறும். இம்மாதத்தில் குறுகிய சாலைகளில், நடக்க வேண்டியிருக்கும் இவற்றையெல்லாம் தவிர்க்க முடியாமல் போகும். ஆனாலும் பாதுகாப்புக்கு என்ன செய்ய முடியும் என்பதை சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தரும் ஆலோசனைகள் பின்பற்றப்படும் என்று சிலாங்கூர் மாநில சுல்தான் தெரிவித்திருக்கிறார்.
மாநில சமயத்தலைவர்ளுடன் இது தொடர்பான சந்திப்புகள் நடைபெற்று வருவதால் மாற்றுவழிகள் ஆராயப்பட்டுவருவதாகவும் முஸ்லீம் மக்கள் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளுமாறு சிலாங்கூர் மாநில சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா கேட்டுக்கொண்டார். பாதுகாப்பு முதலில் என்பதை அவர் வலியுறுத்தினார்.