இயல்புக்குத் திரும்ப ஓராண்டுகாலம்! வல்லுர்கள் கூறுகின்றனர்

டான்ஶ்ரீ டாக்டர் இஸ்மாயில் மெரிக்கான்

கோலாலம்பூர், ஏப்ரல் 1-

கொரோனா பாதிப்பிலிருது இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் ஆறு முதல் ஓராண்டாவது ஆகும் என கணிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் நடமாட்டம் தவிர்க்கப்பட்டாலும் இயல்பு நிலைக்கு மாற்றம் பெற எளிதில் முடியாது என்று டான்ஶ்ரீ டாக்டர் இஸ்மாயில் மெரிக்கான் கூறியிருக்கிறார்.

மக்கள் நடமாட்டக் காலத்திற்குப் பின்னர் ஆறு மாதங்களாவது  சமுக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும்.  குறிப்பாகப் பொது சந்திப்புகள், கூட்டங்கள் திருமணங்களும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆறுமாதங்கள் வரை தொற்றின் தாக்கம் இருக்கும் இருக்கும் வாய்ப்புள்ளது. இக்கால கட்டத்தில் வெளிநாட்டினர் வருகையின் மூலமும் பாதுகாப்பற்ற தன்மை தொடர்ந்து இருக்கும்

நோய்த்தொற்று வல்லுநர்கள் இதற்கு  ஓராண்டுவரை அவகாசம் வேண்டும் என்கின்றனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வெண்டும்.

இத்தருணத்தில் ரமலான் சந்தைக்கு அனுமதி கொடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டு வருவதாக அறிக்கை தெரிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here