சிம்பாங் ரெங்கம் சிக்கிக் கொண்டது எப்படி?

லாபிஸ், ஏப்.3-
ஜோகூர் மாநிலத்தின் மத்திய நகரான சிம்பாங் ரெங்கம் முழு ஊரடங்கிற்கு உற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் இதர பகுதிகளைக் காட்டிலும் சிம்பாங் ரெங்கம் மீது அதீத கவனம் திரும்பியது எப்படி?

ஒரு பிரிவினர் அதிகமாக வசிக்கும் கம்பம் ஒன்றில் திருமண வைபவம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

ஊரடங்கு அமலாக்கத்திற்குப் பிறகு நடைபெற்ற இத்திருமண விழாவில் கம்பத்து மக்கள் அனைவரும் கலந்து கொள்ள அதில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராகப் பணியாற்றி வந்த ஒருவர் ஸ்ரீபெட்டாலிங் தப்லிக் ஜமா மாநாட்டில் கலந்து கொண்டார்.

மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து சமையல் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

நிலைமை முற்றி இவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்ற உத்தரவு தொடர்ந்து மீறப்பட்டு வந்திருக்கிறது.

மேற்கண்ட இந்த மூன்று காரணங்களுக்காகவே சிம்பாங் ரெங்கம் மக்கள் வெளியே செல்ல முழு அளவிலான தடை விதிக்கப்பட்டுள்ளது.

நகருக்குள் நுழைய உதவும் ஆறு பிரதான சாலைகளும் மூடப்பட்டு விட்டன. வெளியாட்களும் சிம்பாங் ரெங்கம் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here