கொரோனா தடுப்பூசி தயாரிப்பு 35 நிறுவனங்கள் முயற்சி

கோலாலம்பூர், ஏப்.4-

கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பில் 35 உலக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.

கொரோனா வைரஸ் கொள்ளை நோய் என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தடுப்பு மருந்தை ஊசி மூலமாக செலுத்தும் வழிமுறைகள் குறித்தும் அந்நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

போஸ்டர்ன் நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மோடர்னா என்ற மருத்துவ ஆய்வு நிறுவனம் கொரோனாவுக்கான தடுப்பூசி ஆய்வு நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் மனித உடலின் திசுக்களில் நுழைந்து எப்படி பாழ்படுத்தி வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக ஓஸ்லோவிலிருந்து செயல்படும் செபி நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ரிச்சர்ட் ஹாட்ச்சட் அறிவித்துள்ளார்.

மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை முன்வைத்தே தடுப்பூசி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வரும் நவம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

நவம்பருக்குள் இது சாத்தியமில்லை. கொரோனா தடுப்பூசி அமலுக்கு வர குறைந்தபட்சம் 18 மாதங்களாவது ஆகி விடும் என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆப் டிரோப்பிக்கல் மெடிசன் மருத்துவ ஆய்வுக் கூடத்தின் தலைவர் அன்லிஸ் வில்டர் ஸ்மித்.

கொரானாவுக்கான தற்போதைய ஒரே தடுப்பூசி சமூக இடைவெளி மட்டுமே என நம்பியிருக்கும் உலகம் இன்னமும் நிரந்தர தடுப்பூசி குறித்து நிர்ணயிக்கப்பட்ட முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here