அவசர காலத்தில் லெம்பா பந்தாய்

அவசர காலத்தில் லெம்பா பந்தாய்

கோலாலம்பூர், ஏப்.4-

லெம்பா பந்தாய் சுற்று வட்டாரத்தில் 322 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து இப்பகுதி சிவப்பு கண்காணிப்பு வட்டத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூரின் இதர பாகங்களைச் சேர்ந்த மக்கள் லெம்பா பந்தாய் வட்டாரத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

சிவப்பு வளைய கண்காணிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாட்டின் முதல் சிவப்பு கண்காணிப்பு வளையத்தில் சிம்பாங் ரெங்கம் உட்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டிய பகுதியாக ஆரஞ்சு கண்காணிப்பு வளையத்தில் லெம்பா பந்தாய் வைக்கப்பட்டது.

தற்போது லெம்பா பந்தாயும் சிவப்பு கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டு விட்டது.

உலு லங்காட்(302), பெட்டாலிங்(292), கூச்சிங்(153), சிரம்பான்(149),ஜோகூர் பாரு(139),குளுவாங்(132), கெப்போங்(100), கிள்ளான்(88), தித்திவாங்சா(82), கோத்தாபாரு(82), கிந்தா பள்ளத்தாக்கு (82), கோம்பாக்(76), தாவாவ்(63), ஹிலிர் பேராக்(62), பத்து பஹாட்(48), ஜெரண்டூட்(41) ஆகிய நகர பகுதிகள் சிவப்பு கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன.

கூட்டரசுப் பிரதேசத்தைப் பொறுத்தமட்டில் லெம்பா பந்தாய், கெப்போங் என இரண்டு மாவட்டங்கள் சிவப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருப்பதால் தலைநகரின் மையப் பகுதியும் தீவிர கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

பொது போக்குவர்த்துகள் காலை 5 மணி தொடங்கி காலை 10 மணி வரையில் என 5 மணி நேரங்களுக்கும் மாலை 5 மணி தொடங்கி இரவு 10 மணி என மற்றுமொரு 5 மணி நேரங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here