கோலாலம்பூர், ஏப்ரல் 5-
கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் தினமும் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.
மனித உரிமைகளைக் கருத்தில் கொண்டு செயல்படுவதன் மூலம் போலீஸ் தலைமையம் எப்போதும் தனது கடமைகளை நிறைவேற்றி வருகிறது, அனைத்து தரப்பினரும் காவல்துறையின் சிரமமானப் பணியைப் புரிந்து கொள்ள வேண்டும், என்று டான்ஶ்ரீ அப்துல் ஹமீட் பாடோர் செய்தியாளர்களிடம் கூறினார் .
காவல்துறை உறுப்பினர்கள் 33 பேர் கோவிட் -19 தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என உறுதிப் படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 750 பேரை தனிமைப்படுத்தவும் பணிக்கப்பட்டுள்ளதாகப் போலீஸ் தலைவர் அப்துல் ஹமீட் பாடோர் தெரிவித்துள்ளார்.
தொற்றுக்கு அதிகாரி ஒருவர் பலியாகி இருக்கிறார். மேலும் வெளிநாட்டிற்குச் சென்றவர்களில் சிலர் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கின்றனர்.
மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) அமல்படுத்தும் அனைத்து காவல்துறையினருக்கும் முகமூடி அணியவும், கைகளைச் சுத்திகரிப்புச் செய்யவும் அறிவுறுத்தப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.