ஆணவம் ஒழிய ராணுவ வழி

கோலாலம்பூர், ஏப்ரல் 5-

தொற்று நோய் பாதிப்பில் 40 ஆயிரம் தலைமறைவாய் இருப்பதாக போலீசார் அரிவித்திருக்கின்றனர் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அப்படியென்றால், இந்நாட்டின் நலன் முக்கியமல்ல என்பதைத்தானே அந்தப்பபிடிவாதம் உணர்த்துகிறது. இது ஆரோக்கியமான சிந்தனையே அல்ல. நாட்டை அழிக்க ஏவி விடப்பட்டவர்ளாக இருப்பார்களோ என்ற ஐயமும் இப்போது எழுந்திருக்கிறது.

பல இடங்களில் நடந்த சமய நிகழ்ச்சிகளில் இவர்கள் இருந்திருக்கின்றனர். இது யாருக்கும் ஒரு பொருட்டல்ல. கலந்துகொண்டவர்கள் கோவிட் 19 ஐ சுமந்து வந்து பரப்பியிருக்கிறார்கள்.

இதை அவர்களே உணராமல், தெரியாமல் கூட அவர்கள இருந்திருக்கலாம். தெரிந்தபின் பிடிவாதம் செய்தால் சாபம் விடுவதில் தவறென்ன வந்துவிடப்போகிறது.

திட்டமிட்டே அவர்கள் வன்மக் குணத்துடன் மறைந்திருக்கின்ரா? இப்படி நினைத்திருப்பவர்கள் நாட்டின் மீது அக்கறையுள்ளவர்கள். தீங்கென்று தெரிந்தும் அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்த பிடிவாதத்துடன் பதுங்கியிருப்பதன் காரணமென்ன? சந்தேகம் எழுகிறது.

அவர்களின் குடும்பத்தாரும் அவர்களை மறைத்துவைக்க எண்ணம் கொண்டிருக்கிறார்களா என்றே தோன்றுகிறது.

இப்படித்தான் இருக்குமென்றால், அழிந்துபோகும் முன்னணி யாராக இருக்கும் என்பதை ஆறாம் அறிவு மறைத்தால் ஏழாம் அறிவு உணர்த்தும். ஏழாம் அறிவு என்பது மகான்கள் அறிவு. நல்ல மகன்களுக்கே அது இருக்கும்.

முழு மருத்துவ சோதனைக்கு அரசு வாய்ய்பு வழங்கியிருக்கிறது. அதைப்பயன்படுத்திக்கொண்டிருதால் தொற்று எண்ணிக்கை உயர்ந்திருக்காது.

எண்ணிக்கை உயர்வுக்கு யார் காரணம் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

இது, கொலைக்குச் சமமானத் திட்டம் என்றாலும் மறுப்பதற்கில்லை. நாடு பேரழிவில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் அவர்களை அலசிப்பிடிக்க வேண்டும். மலேசிய ராணுவம் களமிறங்கட்டும்.

மலேசிய நாடு காபாற்றப்பட ஒத்துழைப்பே சிறந்தவழி. அது நம்வழி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here