கோலாலம்பூர்:
முதல் வகுப்புப் பட்டதாரிகளுக்கான, கல்விக்கடன் தள்ளுபடி (loan repayment exemption) திட்டம், இன்னும், நடைமுறையில் உள்ளது. அது, திரும்பப் பெறப்படவில்லை என்று, தேசிய உயர் கல்வி நிதி வாரியம் (`பி.டி.பி.டி.என்.’ – PTPTN) உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, `பி.டி.பி.டி.என்.’ தலைவர், டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹீம் (Datuk Seri Norliza Abdul Rahim), நேற்று இரவு, ஒரு அறிக்கையில், தெளிவுபடுத்தியுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், 2019-ஆம் ஆண்டு முதல், முதல் வகுப்புப் பட்டத்துடன், பட்டம் பெற்ற, கல்வி கடன்பெற்ற மாணவர்களுக்கு இந்தத் தள்ளுபடி, கிடைக்கும்.
இந்தக் கொள்கை, பொருளாதாரப் பின்னணி, இனம் அல்லது, மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து, தகுதியுள்ள பட்டதாரிகளுக்கும், பொருந்தும்.
இதனிடையே, கல்வித் திறனை, ஊக்குவிப்பதும், அதற்கு, வெகுமதி அளிப்பதும், இந்தத் திட்டத்தின், நோக்கமாகும்.
மேலும் கல்விசார் கொள்கையை, அரசியலாக்க வேண்டாம் என்று, பி.டி.பி.டி.என்.’, பொதுமக்களை, வலியுறுத்தியுள்ளது.
எனவேதான், மாணவர்கள் இந்தத் தள்ளுபடிக்கு, மைபிடிபிடிஎன்’ (myPTPTN) செயலி மூலம், விண்ணப்பிக்கலாம்.
அதுமட்டுமின்றி, சிறந்த மாணவர்களுக்கு, ஆதரவளிப்பதில், வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும், செயல்படுவதாக, PTPTN, மீண்டும், உறுதிப்படுத்தியுள்ளது.





















