நான் உங்களுக்கு கொரோனா வைரஸை கொடுக்கிறேன்! 36 வயது பெண் செயலால் உறைந்து போன மக்கள்

அமெரிக்காவில் நான் உங்களுக்கு கொரோனா வைரஸை கொடுக்கிறேன் என கூறியவாறு மக்களிடம் சென்று இருமிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். Alaska மாகாணத்தை சேர்ந்தவர் Dawn Oozevaseuk (36). இவர் அங்குள்ள Nome Recreation Center என்ற இடத்துக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்களிடம் எனக்கு கொரோனா தொற்று உள்ளது, நான் உங்களுக்கு கொரோனா வைரஸை கொடுக்கிறேன் என கூறியவாறே அருகில் சென்று இருமியுள்ளார்.

இதனால் பயந்து போன அவர்கள் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் Oozevaseuk-வை கைது செய்தனர்.

ஜாமீனில் அவர் வெளியில் வரமுடியாதபடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் உண்மையிலேயே Oozevaseuk-வுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

பொலிசார் கூறுகையில், சம்பவம் நடந்த அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் Oozevaseuk இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். தொற்று நோய் தீவிரமாக உள்ள நிலையில் இது போன்ற செயலை ஏற்று கொள்ள முடியாது என கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here