பகாவ்,ஏப்.17-
பகாவ் நகரில் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடு மேலும் இறுக்கமடைகிறது.
நெகிரி மாநிலத்தின் செண்டயான், ஜாசின் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று வலுவடைந்திருப்பதால் இதர நகர்களுக்கு பரவாமல் இருக்க காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
17ஆம் தேதி தொடங்கி பகாவ்-ரொம்பின் சாலை பொது போக்குவத்துக்கு மூடப்படுகிறது. தாமான் சொர்ணம் செல்லும் வழியும் மூடப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது.
ஜெம்போல்-பகாவ் சாலையும் மூடப்படுவதால் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் லோரிகள் செர்த்திங் தெங்கா சாலையை பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.