ரசாயனப் பயன்பாட்டினால் வனவிலங்குகளை அழியும்

கோத்தா கினபாலு, ஏப் 16-

ரசாயன பயன்பாட்டினால் வனவிலங்களுக்குப் பேராபத்து காத்திருப்பதாக சபா மாநில துணைமுதலமைச்சர் கிரீஸ்டினா லியூவ் எச்சரித்துள்ளார்.

ஒரு நாட்டின் வளப்பத்திற்கு வனவிலங்குகளே ஆதாரமாக இருக்கின்றன. வனவிலங்குகளைக் கப்பாற்றும் பொறுப்பு அரசாங்கத்திற்கு அதிகமாகவே இருக்கிறது.

இதில், தோட்ட உரிமையாளர்களும் விதிவிலக்கல்ல. செம்பனைத்தோட்ட உரிமையாளர்கள் அபாயகரமான ரசாயனங்களைப் பயன்படுத்துவது அறியப்பட்டிருக்கிறது.

அபாயகரமான ரசாயனங்களின் கலவை நீரோடைகளில் சேர்ந்துவிடுவதால் அந்நீரினால் வன விலங்குகள் மடிகின்றன.

சில பொறுப்பற்றவர்களின் இச்செயல் கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தீய எண்ணத்துடன் ஒரு யானைகளைக் கொல்லும் வன்மம். அதனால் தீங்கு விளைந்திருப்பதை அவர் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

இதற்கான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இறந்த யானை எதனால் இறந்தது என்று இன்னும் அறியப்படவில்லை. இறந்த யானையின் உடலில் வெளிக்காயங்கள் இல்லை. இது சதியாக இருக்கலாம் .

குறிப்பாக யானைகள் தோட்டங்களில் சுதந்திரமாக நடமாடுவதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்றன் என்பதால் அவற்றுக்குத் தீங்கிழைக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here