காப்பார், ஏப்.17-
நடமாட்டத் தடையை மீறி இந்தியர் ஒருவரின் இறுதிச் சடங்கில் திரளாகக் கூடிய 26 இளைஞர்களை தாங்கள் கைது செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காப்பார், தாமான் இந்தான் குடியிருப்பில் நிகழ்த்தப்பட்ட இறுதிச் சடங்கின்போது மோட்டார் சைக்கிள்களில் சுமார் 50 பேர் வலம் வருவதாகத் தகவல் கிட்டியது.
பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறினர் என்ற அடிப்படையில் 26 பேரைக் கைது செய்திருக்கிறோம் என கிள்ளான் உத்தாரா மாவட்டக் காவல் நிலையத் தலைவர் ஏ.சி.நூருல் ஹூடா முகமட் சாலே தெரிவித்தார்.