கோலாலம்பூர்: மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு (எம்.சி.ஓ) காலத்தில் ஒரு போலீஸ்காரரைத் தாக்கியதாகக் கூறப்படும் உணவு விநியோகஸ்தர் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
28 வயதான அவ்வாடவனை ஏப்ரல் 18 (சனிக்கிழமை) முதல் ஏப்ரல் 21 வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுவார் என்று அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் ஏசிபி நூர் அஸ்மி யூசோஃப் (படம்) தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17), பாண்டான் சஹாயாவில் உள்ள ஜாலான் சஹாயா 2/3ஏ வைச் சுற்றி ரோந்து சென்ற போலீசார், காலை 10 மணியளவில் அந்த நபர் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுவது கவனத்துள்ளார்.
போலீசார் அவரை அணுகியபோது, சந்தேக நபர் அவர்களைத் திட்டினார் மற்றும் மோசமான வார்த்தையைப் பயன்படுத்தியதோடு சந்தேகநபர் போலீஸ்காரர்களில் ஒருவரை குத்தியதில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரருக்கு கை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது. சந்தேகநபர் பின்னர் போலீஸ்காரரைத் தாக்கியது மற்றும் எம்.சி.ஓவை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.