ரசிகர்கள் இன்றி டென்னிஸ் போட்டியா? – ஹாலெப் எதிர்ப்பு

லண்டன்,ஏப்ரல் 20-

ரசிகர்கள் இன்றி மூடிய மைதானத்தில் டென்னிஸ் விளையாடுவது குறித்து சமீபத்தில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சும் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) விவாதித்தனர். இதற்கு அவர்கள் ஆதரவும் தெரிவித்தனர். ஆனால் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதற்கு விம்பிள்டன் சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான சிமோனா ஹாலெப் (ரூமேனியா) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘ரசிகர்கள் இன்றி டென்னிஸ் ஆடுவது சரியாக இருக்காது. மிகப்பெரிய போட்டிகளில் நாங்கள் மிகவும் உற்சாகமாக, ரசித்து விளையாடுகிறோம் என்றால், அதற்கு ரசிகர்கள் அளிக்கும் உத்வேகமும், கரவொலியும் தான் காரணம். இல்லாவிட்டால் டென்னிஸ் வேறு விளையாட்டாகி விடும்‘ என்றார். செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவா கூறும் போது, ‘ரசிகர்கள் தான் மிகவும் முக்கியம். இது ஒரு தனிநபர் விளையாட்டு. அதனால் தான் ரசிகர்கள் எங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here