ஷா ஆலம் செக்‌ஷன் 13 ஆம்பேங்க் வங்கியில் கொள்ளை

ஆடவன் ஒருவன் கைத் துப்பாகியை கொண்டு இன்று ஷா ஆலம் செக்‌ஷன் 13-இல் உள்ள ஆம்பேங்க் வங்கியில் கொள்ளையடித்து தப்பிச் சென்றான்.

பிற்பகல் 2.45 மணியளவில் அந்த ஆடவன் வங்கி உள்ள நுழைந்து மேல் நோக்கி சுட்டு பணியாளர்களை மிரட்டி பணத்தை அபகரித்து சென்றுள்ளான் என ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹரூடீன் பின் மாட் தயிப் தெரிவித்தார்.

அந்த ஆடவன் 3,716 வெள்ளியை கொள்ளையடித்து சென்ற நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • இரா. கோபி கிருஷ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here