மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா, பேரரரசியார் துங்கு அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியா இருவரும் மலேசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த புனித மாதத்தில் அனைத்து முஸ்லிம்களும் தங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தவும், மத நடவடிக்கைகள், நல்ல செயல்களை அதிகரிக்கவும் பேரரசர் உத்தரவிட்டதாக அரண்மனை செய்தியாளர் டத்தோ அஹ்மத் ஃபாட்சில் ஷம்சுதீன் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள முஸ்லீம்கள் நோன்பு மாதத்தை அர்த்தமுள்ள செயல்களால் நிரப்பவும் அவர்களின் நல்ல செயல்களை அதிகரிக்கவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.
முஸ்லீம்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையை வலுப்படுத்தவும், ஒற்றுமையாக இருக்கவும், சுற்றியுள்ள சமூகங்களைப் பற்றி அக்கறை கொள்ளவும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார் என்று அவர் நேற்று இரவு இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னணிச் சேவையாளர்கள் நோன்பு மாதத்தில் வலுவாக இருக்க வேண்டும் என்றும், கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த தங்கள் கடமைகளைச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கடினமான நேரங்களை பொறுமையுடன் எதிர்கொள்ளவும், மக்கள் நடமாட்டக் கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையை கடைப்பிடிப்பதன் மூலம் அதிகாரிகளுக்கு உதவவும் பேரரசர் வலியுறுத்தினார்.
குடும்பத்தினருடன் வீட்டில் இருக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், குடும்ப உறுப்பினர்களை கோவிட் -19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க்கப்படுவர் என்று அஹ்மத் ஃபாட்சில் கூறினார்.
நாட்டில், கோவிட் -19 புதிய வழக்குகளின் கீழ்நோக்கிய போக்கு தொடரும் என்றும் மலேசியா விரைவில் நோயிலிருந்து விடுபடும் என்றும் பேரரசர் நம்பிக்கைத்தெரிவித்தார்.