கோலா குபு பாரு , ஏப்.29-
சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் நடவடிக்கையின்கீழ் சோதனை செய்தபோது 238 பேரை போலீசார் பத்தாங் காலி கம்போங் உலு ரெனிங் பகுதியில் கைது செய்தனர்.
மாலை 5 மணிக்கு நடந்த இந்த நடவடிக்கையில், காடுகளுக்குள் பிளாஸ்டிக் கூடாரங்களில் குழந்தைகள் உட்பட 76 ஆண்கள், 77 பெண்கள் 85 குழந்தைகள் இருந்தனர். இவர்களைப் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர் என்று சிலாங்கூர் சிஐடி தலைவர் டத்தோ ஃபாட்ஸில் அஹ்மத் தெரிவித்தார்.
குடியேறியவர்கள் பல மாநிலங்களில் இருந்து வந்த திவான் பெர்காசா எகோனோமி இஸ்லாம் நுசாந்தரா உறுப்பினர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டனர்,.
இந்த சங்கத்தின் விவரங்கள் விசாரக்கபடுகின்றன, அவர்கள் அறிந்திருப்பது அவர்கள் சாப்பிடுவது, குளிப்பது, இப்பகுதியில் வசிப்பது, என்றெல்லாம் ஆராயப்படுகிறது. இந்த இடத்தை அவர்கள் ஆக்கிரமித்திருப்பதை போலீசார் இங்குள்ள டேவான் செர்பகுணா கோலகுபு பாருவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாட்டின் மார்ச் 18ஆம் தேதி மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணை (எம்.சி.ஓ) அமல்படுத்தப்படுவதற்கு முன்னர், அவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஃபாட்ஸில், இந்த விவகாரத்தில் போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருவதாகக் கூறினார்.
அவர்கள் ஆணையை மீறியிருக்கின்றனர். அவர்கள் கோலாலம்பூர், கிளந்தான், பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் என்று அவர் கூறினார்.
சந்தேக நபர்களான இவர்கள் கோலகுபு பாருவில் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், அங்கு அவர்கள் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சகம், சமூக நலத்துறை , கோலகுபு பாரு மாவட்ட கவுன்சில் ஆகியவை இச்செயல்முறைக்கு உதவுவதோடு அவர்களின் தேவைகளையும் கவனித்து வருவதாக அவர் கூறினார்.