உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணை மாற்றம்

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி

26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினின் ஹெல்வா நகரில் அடுத்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா அச்சத்தால் டோக்கியாவில் இந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் விளையாட்டு அடுத்த அண்டு ஜூலை-ஆகஸ்டுக்கு மாற்றப்பட்டதால், உலக பேட்மிண்டன் போட்டிக்கான தேதியை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் உலக பேட்மிண்டன் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று மாற்றி அமைத்து வெளியிட்டது. இதன்படி 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி முதல் டிசம்பர் 5-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. உலக பேட்மிண்டன் போட்டி ஒலிம்பிக் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் நடத்தப்படுவது வழக்கம். இந்த முறை ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிபோனதால், முதல்முறையாக ஒலிம்பிக் போட்டி நடக்கும் ஆண்டிலேயே உலக பேட்மிண்டன் போட்டியும் அரங்கேற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here