எண்ணிக்கை சரிவால் மூச்சுவிட முடிகிறது?

கோலாலம்பூர்:
ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அன்றாட நடவடிக்கைகளை பொதுமக்கள் மீண்டும் செய்யத்தொடங்கியிருக்கின்றனர். இது போதுவாகவே மாற்றத்தின் உணர்வை மக்களிடையே பிரதிபலிக்கிறது.

கடந்த ஐந்து மாதங்களாக சுகாதார அமைச்சின் முன்னணி வீரர்கள் பெரு சிரமத்தில் உழன்றனர். இன்னும் அப்படித்தான் இருக்கின்றனர். இப்போது குறைந்துவரும் கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை கீழ்நோக்கித்தெரிவதால் அவர்கள் சற்றே ஓய்வு எடுக்க முடிவதாகத்தெரிகிறது. இது , பெருமூச்சுக்கு வழி வகித்திருக்கிறது.

சில வளாகங்களில் வங்கிகள், கடைகள் , பேக்கரிகள் போன்றவற்றில் மக்கள் வரிசையாக நிற்பதைக் காணமுடிகிறது. இந்த வரிசை சமூக கூடல் இடைவெளி தூரத்தை மக்கள் பின்பற்றுவதைக் காட்டுகிறது. முகக்கவசத்துடன், தங்கள் முறைக்கு பொறுமையாகக் காத்திருக்கிறார்கள்.

மக்களின் புதிய, இயல்பான நடைமுறைகள் குறித்து மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பாராட்டைத் தெரிவித்திருக்கிறார். இது, சமூகம் சுய கட்டுப்பாட்டுக்கு மாற்றமடைந்திருப்பதன் பிரதிபலிப்பு என அவர் கூறுகிறார். எனவே கடந்த திங்கட்கிழமை, நிபந்தனையுடனான மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணையின் முதல் நாளில், எந்தவொரு கடுமையான சிக்கல்களும் உருவாக்கவில்லை.

வணிகவளாகத்தின் உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க முறைமையை (SOP) பின்பற்றிவருவது மாற்றத்தை ஏற்றுக்கொண்டதை உணர்த்துகிறது என்றார் அவர்.

இந்த நடைமுறையை பொதுமக்கள் தொடர முடிந்தால், நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும், இதுவரை 6,383 தொற்றுகள், 106 இறப்புகள் பதிவாகியுள்ள கோவிட் -19 தொற்றின் பரவலைத் தடுக்க எடுத்திருக்கும் முயற்சிகள் வெற்றிபெறும்.

நிபந்தனை மாற்றத்துக்கு இணங்குவது தொற்றால் பாதிக்கப்படுவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், கோவிட் -19 தொற்றைத் தடுக்க உழைக்கும் முன்னணியில் இருப்பவர்களுக்கு இது உதவும் செயலாகவும் இருக்கும்.

சுகாதாரப் பணியாளர்களுக்கு ஓர் இடைவெளி தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார் . சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ நோர் இஷாம் தெரிவித்தார். இப்போது வழக்குகள் குறைந்து வருகின்றன என்பதால் இந்த இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. தொற்றுகளில் அதிகரிப்பு ஏற்பட்டால், சுகாதாரப் பணியாளர்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அப்படி நேராமல் இருக்க கூடல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here