ஷா ஆலம் (பெர்னாமா): ஒரு மரத்தில் இருந்து நாயின் கழுத்தை தொங்கவிட்டு வைரலான வீடியோவில் காணப்பட்ட நபர் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கோலலங்காட் காவல்துறைத் தலைவர் சூப்பிரண்டென்ட் அஜீசன் துக்கிமான் தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் வேலையற்ற நபர் கடந்த மூன்று ஆண்டுகளாக பந்திங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு பதிவு சோதனை மூலம் தெரியவந்துள்ளது என்றார்.
தூக்குலிட்ட நாயை பரிசோதித்தில் அது பாதிக்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டது. புதன்கிழமை (மே 6) இரவு 11 மணியளவில் கால்நடை துறையின் விலங்கு நலப் பிரிவினரால் அவர் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டு வியாழக்கிழமை தடுப்பு காவலுக்காக போலீசாரிடம் ஒப்படைத்தாகக் கூறினார்.
பத்து 17, சுங்கை செடு, ஜாலான் பந்திங் -கிளாங்கில் உள்ள மனிதனின் வீட்டின் முன் நடைபெற்ற இந்த சம்பவம் ஒரு டாஷ் கேமிரா வழி வெளிவந்துள்ளது. புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் விலங்கு நலப் பிரிவின் பந்திங் கிளையின் பிரதிநிதியிடமிருந்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அறிக்கை கிடைத்ததாக அஜீசன் தெரிவித்தார்.
விலங்கு நலப் பிரிவின் கூற்றுப்படி, காலை 10 மணியளவில் இந்த சம்பவம் குறித்து பொதுமக்களிடம் புகார் வந்தது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அந்த நபரை நாயை விடுவிக்கச் சொன்னார்கள், ஆனால் அவர் மறுத்துவிட்டார். எச்சரிக்கப்பட்ட பின்னர், அவர் இறுதியாக கயிற்றை அவிழ்த்துவிட்டார். பின்னர் அந்த நாய் விலங்குகள் நலப் பிரிவினால் கைப்பற்றப்பட்டது என்று சூப்பிரண்டென்ட் அஜீசன் கூறினார்.