செலாயாங், மே 16-
தாமான் செலாயாங் ஜெயா குடியிருப்பு பகுதியின் வீ டு ஒன்றில் இரு வெடி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டின் முன் வெடி குண்டு இருப்பதாக அவ்வீட்டில் இருந்த கணவண் மணைவி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து போலீஸாரின் பட்டாளமே அங்கு விரைந்ததில் குடியிருப்பாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் அந்த வெடிகுண்டுகளை பரிசோதனை செய்ததில் அது மோட்டார் ரக வெடிகுண்டு என்பதையும் அது செயலிழந்த நிலையில் இருப்பதையும் கண்டுப்பிடித்தனர் என்று கோம்பாக் மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி அரிஃபாய் தராவே கூறினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை மற்றொருவருக்கு விற்றிருக்கிறார். வீட்டின் அசல் உரிமையாளர் பழைமையான பொருட்களை சேகரிக்கும் குணம் உள்ளவர் என்பது தெரிய வந்தது, அதோடு இந்த வெடிகுண்டு அவருக்கு சொநதமானதாகும். இருந்தாலும் அவ்வீட்டில் தங்கியிருந்த அனைவரும் விசாரிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.
மேலும் அது வெறும் செயலிழந்த வெடிகுண்டு. எனவே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அரிஃபாய் கேட்டுக் கொண்டார்.