எலிகள் கூட மதிக்காது

நாட்டின் எல்லைப்பகுதிகள் மிகவும் நுண்ணியபார்வையில் இருக்க வேண்டும் என்பது தீவிரமாக்கப்பட்டிருப்பதை முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கிறார்.

நாட்டின் சதா காலமும் இந்தப் பிரச்சினை ஓயவில்லை என்பதற்கு சாட்சிகள் தேவையில்லை. அமைச்சரின் செய்தி ஒன்றே போதுமானது. எல்லைக் காவலர்களைப் பணிமாற்றம் செய்வதே சிறந்த வழியாகவும் இருக்கும்.

இன்னும் எல்லைப்புறக் காவலில் பலவீனம் இருக்கிறது அல்லது பலவீனப்படுத்தப்படுகிறது என்றே தோன்றுகிறது.

அண்மைய கணக்கில் 1408 பேர் எல்லைப்புற எலி வலையின் வழி உள்ளே நுழைய முயன்றிருக்கின்றனர். இந்த வலை தயார் செய்யப்படும் வரை காவலர்கள் கண்களில் படாமல் இருக்கிறது என்பது கேள்வி மட்டும் அல்ல சந்தேகம்.

குறிப்பாக, எல்லைப்பகுதியில் உயரமான சுவர் அமைக்கப்டும் என்றார்கள். அப்படியே அமைக்கப்பட்டிருந்தால் அதில் எலிவலை அமைக்கும் வரை எல்லைப்படைகள் ஏன் கவனிக்காமல் இருந்தன என்ற கேள்விகளும் எழத்தான் செய்யும். இது குற்றச்சாட்டுகள் அல்ல. குறைபாடுகள்.

திருடனைப் பிடிக்க திருடனை நியமி என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. இதுபோலவும் யோசிக்கலாம். காலர்களைப்பிடிக்க காவலர்களை நியமிப்பது சரியானததாக இருக்காது. சிறப்புக்குழு ஒன்று செயல்படுவது என்றால் காவலர்கள் மீது நம்பிக்கையில்லை என்று பொருள். அப்படித்தான் நிலைமை இருக்கிறது. அப்படியானால் காவலர்கள் நம்பிக்கையானவர்களாக இருக்க வேண்டுமே! இருக்கிறார்களா!

எலி வலைப்பேர்வழிகள், கடத்தல் பேர்வழிகள் கொரோனாவை விட மோசமானவர்கள். அவர்களின் மீது கழுகுப் பார்வை இல்லாவிட்டால் உண்மையான எலிகள் கூட மதிக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here