அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு

தூத்துக்குடி டூவிபுரத்தில் தூய யாக்கோபு ஆலயம் உள்ளது. இங்குள்ள கோபுரத்தின் மேல்பகுதிக்கு கடந்த சில நாட்களாக வித்தியாசமான தோற்றத்தில் சில பறவைகள் வந்துள்ளன. இவற்றின் சப்தமும் வித்தியாசமாக இருந்ததால் அங்கிருந்த கோவில் நிர்வாகிகள் மேலே சென்று அதனை பார்த்துள்ளனர்.

இதில் அந்த அங்கு 5 ஆந்தைகள் இருந்துள்ளன. அவை வழக்கமான ஆந்தைகளை போல அல்லாமல் முகம் மற்றும் முன் பகுதி வெண்மையாகவும், முதுகு பகுதி கறுப்பு மற்றும் பிரவுண் நிறத்தில் உடல் முழுவதும் புள்ளிகளாகவும் இருந்துள்ளது. அவர்கள் அதனை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்குள் அங்கிருந்த பறவைகள் 3 பறந்து சென்றுவிட்டன. தொடர்ந்து ஆலய குருவானவர் வேதநாயகம் மற்றும் நிர்வாகிகள் திமுக பிரமுகர் ரவிந்திரன் உள்ளிட்டவர்கள் 2 பறவைகளை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வனத்துறையினர் அதனை ஆய்வு செய்ததில் அவை அரியவகை பறவையான கூகை ஆந்தைகள் (பார்ன் அவுல்) என்று தெரியவந்தது. மிகவும் உயரமான இடங்களில் வசிக்கும் வகையான அவை இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். அவற்றை காட்டுப்பகுதியில் விடவும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here