ராகவா லாரன்ஸ் நடத்திவரும் டிரஸ்டில் தங்கியிருக்கும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு இவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார்.

மேலும் அசோக் நகரில் இவர் நடத்தி வரும் டிரஸ்ட்டை சார்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்த போது 10 மாணவிகள், 5 மாணவர்கள், 3 பணியாளர்கள், 2 சமல்காரர்கள் என 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here