இந்திய பளுதூக்குதல் வீராங்கனையும் முன்னாள் உலக சாம்பியனுமான மீராபாய் சானு ஏற்கனவே இந்திய விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதை 2018ஆம் ஆண்டு பெற்று இருக்கிறார். இந்த நிலையில் அவரது பெயரை அர்ஜூனா விருதுக்கு இந்திய பளுதூக்குதல் சம்மேளனம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. பளதூக்குதலை சேர்ந்த ரஹலா வெங்கட் ராகுல், பூனம் யாதவ் ஆகியோரது பெயரும் அர்ஜூனா விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
25 வயதான மீராபாய் சானு கூறுகையில், ‘கேல்ரத்னா விருது மிக உயரியது என்பதை அறிவேன். அதே நேரத்தில் ஆரம்பத்தில் நான் அர்ஜூனா விருதை தவற விட்டிருக்கிறேன். அதையும் பெற வேண்டும்.
ஏற்கனவே கேல்ரத்னா விருதை பெற்ற ஒருவரது பெயரை பிறகு அர்ஜூனா விருதுக்கு விண்ணப்பிக்க முடியுமா என்று பளுதூக்குதல் பொதுச்செயலாளர் சஹாதேவ் யாதவ் கூறுகையில் ‘இது சாத்தியமே’ என்று அவர் பதில் அளித்தார்.