இந்தியாவில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இன்று காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,65,799- லிருந்து 1,73,763 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706- லிருந்து 4,971 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 71,106- லிருந்து 82,370 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86,422 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 62,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26,997 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2,098 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் தமிழகத்தில் 20,246, குஜராத்தில் 15,934, டெல்லியில் 17,386, ராஜஸ்தானில் 8,365, மத்திய பிரதேசத்தில் 7,645, உத்தரப்பிரதேசத்தில் 7,284, ஆந்திராவில் 3,436, தெலங்கானாவில் 2,425, கர்நாடகாவில் 2,781, கேரளாவில் 1,150, புதுச்சேரியில் 51 பேர் கொவிட்-19 பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 7,964 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், 265 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here