சோகத்தில் குஷ்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா அதிகம் பதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள தனது நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து குஷ்புவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் டுவிட்டரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here