ஆப்பிரிக்கர்களை ரணமாக்கும் கருத்து – மலேசிய முன்னாள் அழகு ராணிக்கு எதிராக கடும் விமர்சனம்

அமெரிக்காவில் தடுப்பு காவலில் கறுப்பின ஆடவர் கொலை தொடர்பில் ஆப்பிரிக்கர்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த மலேசிய முன்னாள் அழகு ராணிக்கு எதிராக ஏரளமான கண்டங்கள் வலுக்கின்றன.

ஜோர்ஜ் ஃபிளாய்ட் எனும் கருப்பின ஆடவரை அமெரிக்க போலீஸ் அதிகரிகள் கொடுரமான முறையில் நடத்தி தடுப்பு காவலில் வைத்து கொன்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டில் வாழும் ஆப்பிரிக்கர்கள் தொடர்ந்து 6 நாட்களாக கடுமையான வீதி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஆங்காங்கே கூட்டம் கூடி கார், பேருந்து, கட்டடம் என பல பலவற்றை எரிப்பது, உடைப்பது போன்ற வன் செயல்கள் தலை விரித்து ஆடுகின்றன. இதனால் அமெரிக்காவில் பல இடங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்படுள்ளது. இருந்தாலும் அதை மீறி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். வெள்ளை மாளிகையை முற்றுகையிடும் அளவிற்கு போராட்டம் கொந்தளித்துள்ளது.

இந்த போராட்டம் தொடர்பில் மலேசியாவின் முன்னாள் அழகி ராணி சமாந்தா கெதி ஜேம்ஸ் (வயது 25) தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் தெருவில் இறங்கி போராடுவது முட்டாள் தனமான செயலாக தான் கருதப்படுகிறது.  இதிலிருந்து வெள்ளையர்கள் வென்றது தெளிவாக தெரிகிறது என்று அவர் கூறியுள்ளார். தாம் அமெரிக்காவில் வாழா விட்டாலும், இது தமக்கு தொடர்பில்லாத ஒன்றாக இருந்தாலும் வெள்ளையர்கள் வென்றிருப்பது தான் உண்மை என அவர் தமது முதல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கருப்பினத்தவர்களே பொறுமையாக இருங்கள். இதனை உங்களுக்கான சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் நீங்கள் கருப்பினத்தவர்களாக பிறந்திருப்பது பல்வேறு பாடங்களை கற்றுக் கொள்வதற்காக தான்.

வறுமை மற்றும் பசி இன்னமும் இருந்து தான் வருகிறது. இதனை அனைவரும் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். எனவே பொறுமையாக இருங்கள். எண்ணங்களை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் கடமை.

சமாந்தா கெதியின் பதிவை பார்த்த ஒருவர்  ‘அமெரிக்காவில் கறுப்பினத்தவளாக அவர்கள் பிறந்திருப்பது காரணமாக தான்’ என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

நம் ஆத்மாக்களைப் போல தான். இந்த வாழ்க்கை, இந்த நாடு, இந்த இனம், இந்த மனித வடிவம், குறிப்பாக நான் ஏன் மலேசியாவில் ஒரு வெள்ளை பெண்ணாக பிறக்க வேண்டும்.  சீன அம்மா, பிரேசிலை சேர்ந்தவர் அப்பா, இந்திய தாத்தா பாட்டி ஆகியோருடன் வாழ்கிறேன் என்பதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் ஒரு ஆத்மாவாக இந்த வாழ்க்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் பதில் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இருக்க கூடிய இன பாகுபாடான செயல் குறித்து போராடும் கறுப்பினத்தவர்களின் போராட்டத்திற்கு மலேசியர்கள் பலர் ஆதரவு கொடுத்து வருவதையும் சமந்தா கெதி தமது பதிவில் சுட்டி காட்டியுள்ளார்.

அவரின் பதிவு தொடர்பில் கருத்து தெரிவித்த மற்றொருவர், கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்களுக்கு சம உரிமை கிடைக்கவில்லை. அவர்கள் போராட்டம் குறித்து நீங்கள் கூறியிருக்கும் கருத்து ரணத்தை ஏற்படுத்துகின்றன என கூறினார்.

தொடர்ந்து வைரலான அவரின் பதிவில் பதில் கூறிய மற்றொருவர், கருப்பினத்தவர்களை பொறுமை காக்க சொல்வதில் துளியும் அர்த்தம் இல்லை. அந்நாட்டில் அவர்களை பாதுகாப்பதாக கூறி அவர்களை கொல்கின்றனர். உங்கள் பார்வையிலான கருத்துகளை வைத்து மட்டும் எதையும் பேச வேண்டாம். உடனடியாக இந்த பதிவை அழித்து விடுங்கள் என கேட்டு கொண்டார்.

இதனிடையே, சமந்தா கெதியின் காயப்படுத்தும் வகையிலான கருத்து முறையானது அல்ல என எம். யு. எம். ஒ எனப்படும் மலேசிய உலக அழகி சங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது முற்றிலும் அவரின் சொந்த கருத்து. இதற்கும் எங்கள் சங்கத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை. காரணம் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் முதல் எங்கள் சங்கத்தை அவர் பிரதிநிதிகவில்லை.

அதோடு இனவாதம் இல்லாத நடவடிக்கைகளை மட்டுமே எங்கள் சங்கம் ஆதரிக்கும். அது வெளிநாடாக இருந்தலும் சரி என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here