ஆடம்பர வீட்டில் கொண்டாட்டம் – 39 பேர் கைது

பங்சாரில் ஓர் ஆடம்பர வீட்டில் கொண்டாட்டம் நடத்திய 39 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவ்வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையத்தைச் சேர்ந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அவ்வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.

வீட்டிற்குள் இருந்த 9 மலாய்க்கார ஆடவர்களையும் 11 சீன ஆடவர்களையும் 10 மலாய்க்கார பெண்களையும் 9 வியாட்நாமைச் சேர்ந்த பெண்களையும் போலீஸார் கைது செய்ததாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி சைருல் நிசாம் பின் முகமட் சைனுடின் தெரிவித்தார்.

மேலும், அவ்வீட்டில் 46.12 கிராம் இடைக் கொண்ட எம்டிஎம்எ, 12 எக்ஸ்தெசி மாத்திரைகள், 4.5 கிராம் கெத்தமின் எனும் வகையிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண், நண்பர்களுடான கொண்டாட்டத்திற்கு 1,900 வெள்ளிக்கு அந்த ஆடம்பர வீட்டை ஒரு நாளுக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார். இணையம் மூலமாக அவர் இவற்றை செய்துள்ளார். நண்பர்களுடனான இந்த கொண்டாட்டத்தில் அனைவரும் கலந்துக் கொள்ளும் படி வாட்ஸ் ஆப் மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் போதைப் பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். முதற்கட்ட சோதனையில் 32 பேர் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. மற்ற எழுவர் போதைப் பொருளை உட்கொள்ள வில்லை. கைது செய்யப்பட்ட அனைவரும் போதைப் பொருள் சட்டவிதியின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

தற்போது அமலில் இருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய குற்றத்திற்காக கைதான மலேசியர்களுக்கு தலா 1,000 வெள்ளி கம்பாவ்ண்ட் விதிக்கப்படும். அதோடு முறையா ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு பிரஜைகள் குடிநுழைவு சட்டவிதி படி விசாரிக்கப்படுவதோடு ஜூன் 5ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த ஆடம்பர வீட்டில் நண்பர்கள் இணைந்து கொண்டாட்டம் நடத்தியதை தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்த பொதுமக்களுக்கு பாராட்டுகள். இப்படி போலீஸாருடன் அனுக்கமான உறவை பொதுமக்கள் ஏற்படுத்திக் கொண்டால் பல குற்றச் சம்பவங்களை தடுக்கலாம் என்று ஏசிபி சைருல் நிசாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here