இந்திய – சீனா எல்லையில் இராணுவ குவிப்பின் காரணமாக எழுந்து வரும் பதற்ற நிலையை தவிர்ப்பது குறித்து இருநாட்டு இராணுவ உயர் அதிகாரிகளும் இன்று சனிக்கிழமை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
எல்லை நிர்ணயம் தொடர்பான மோதல் கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடந்த மே 9 ஆம் தேதி சிக்கிம் மாநில எல்லை சீன இந்திய வீரர்களுக்கிடைய நடைபெற்ற கைக்கலப்பு, கல் எறிதல், கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். அதனால் இருத் தரப்பினரும் காயமடைந்தனர்.
அந்த சம்பவத்திற்கு பின்னர் சீனா எல்லையில் தனது இராணுவத்தைக் குவிக்கத் தொடங்கியது. அதேபோல இந்தியாவும் தனது இராணுவத்தை எல்லையில் குவிக்கத் தொடங்கியது.
கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளில் உலக நாடுகள் சிக்கித் தவிக்கின்றன. இந்த நேரத்தில் உலகின் மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இரண்டு நாடுகள் தங்களது இராணுவத்தை குவித்து வருவதை எல்லா நாடுகளும் ஆழ்ந்த அக்கரையோடு கவனித்து வருகிறது.
இந்த சூழநிலையில் இருநாட்டு இராணுவ உயர் அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.