மலேசியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு பேர் HIV-யால் பாதிப்பு; வெளியான அதிர்ச்சி தகவல்

கோலாலம்பூர்:

நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு பேர் HIV/ எயிட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு புதிய நோய்த்தொற்றுகள் தொடர்ந்து பரவுவது 2030 ஆம் ஆண்டளவில் HIV /எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டுவரும் நாட்டின் இலக்கைத் தடம் புரளச் செய்யக்கூடும் என்று சுகாதார அமைச்சரான அவர் கூறினார்.

“பொதுவாக, 2000 மற்றும் 2009 க்கு இடையில் HIV யின் புதிய நோய்த்தொற்றுகளை 50% வரை குறைப்பதில் மலேசியா வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், 2010 இல் தொடங்கி தற்போது வரை, நோய்த்தொற்றுகள் குறைவதற்கான விகிதம் 24% ஆக குறைந்து வருகிறது” என்று, அவர் கவலை தெரிவித்தார்.

சராசரியாக, ஆண்டுதோறும் மொத்தம் 3,000 புதிய HIV நோய் சம்பவங்கள் பதிவாகின்றன.

இந்த புதிய HIV நோய் சம்பவங்களின் தொடர்ச்சியான அதிகரிப்பு 2030க்குள் HIV /எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதிப்பாட்டை அடைவதில் மலேசியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்று முஹமட் இஸ்மி மத் தைப்பின் (PN-Parit) கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக இன்று நாடாளுமன்றத்தில் அவர் பதிலளித்தார்.

HIV நோய் இன்னும் நாட்டில் பரவுகிறதா என்பதையும், அதன் பரவலைக் கட்டுப்படுத்த சமீபத்திய நடவடிக்கைகள் என்ன என்பதையும் முஹமட் வினவியிருந்தார்.

HIV தொற்றுநோய் குறித்து டாக்டர் ஜாலிஹா தொடர்ந்து கூறுகையில், போதைக்கு அடிமையானவர்களிடையே ஹைப்போடெர்மிக் ஊசிகளைப் பகிர்வதன் மூலம் இந்த நோய்த்தொற்றுகளின் முக்கியமாக பரவும் ஆபத்து உள்ளது என்றார்.

20 முதல் 39 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் HIVயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here