இரவு நேரத்தில் வானில் பறக்கும் விசித்திர உயிரினம் இலங்கையில் பரபரப்பு

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் கடந்த சில நாட்களாக வானத்தில் மர்ம உயிரினம் ஒன்று வான் பரப்பில் பறந்து கொண்டிருப்பதாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் துறை பேராசிரியர்கள் இது குறித்து ஆய்வு நடத்தத் தொடங்கியுள்ளனர்.

வானியர் பேராசிரியரான சந்தன ஜெயர்தன கூறுகையில் அடையாளப்படுத்த முடியாத உயிரினம் ஒன்று வானில் பறந்து கொண்டிருப்பது உண்மைதான்.

அது குறித்து தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம். இந்த உயிரினம் தொடர்பான காணொளி ஒன்றும் கிடைத்திருக்கிறது. இரவு நேரத்தில் வானில் இந்த உயிரினம் பறந்து செல்வதை பார்க்க நேர்ந்த மக்கள் பீதியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

நாங்கள் நாசாவுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளோம். மேல் தகவல்களுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு நெருங்குவதற்கு சில நாழிகை முன்னதாக இந்த உயிரினம் வானில் பறக்கிறது. அப்போது சன்னமான ஒலி எழுகிறது. மர்மமாக இருப்பதால் மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் அடிக்கடி சிலாகிக்கப்பட்டு வருகிறது.

நள்ளிரவு நேரத்தில் கொழும்பு மக்கள் வீட்டை விட்டு வெளியேறவே பயப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here