கோலாலம்பூர்:
தொடர் கனமழை காரணமாக, பெனம்பாங், கம்போங் சாராப்புங் (Kampung Sarapung) கிராமத்தில், நிலச்சரிவு ஏற்பட்டு, வீடு ஒன்று சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒரு ஆடவர், காணாமல் போயுள்ளதாக, நேற்று மாலை, தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் மாலை 6 மணியளவில், அருகிலுள்ள மலையிலிருந்து, மண் சரிவு, வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதில், ஒரு ஆடவரும், ஒரு பெண்ணும், சிக்கிக்கொண்டனர்.
எனவேதான், கிராம மக்கள், இடிபாடுகளில் இருந்து, அப்பெண்ணை மீட்டுள்ளனர். ஆனால், அந்த ஆடவரைக், கண்டுபிடிக்க முடியவில்லை.
மாலை 6.10 மணியளவில், இந்தச் சம்பவம் குறித்து, அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதாக பெனம்பாங் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர், ஜினோ டிங்காலான் (Zeno Tinggalan) தெரிவித்தார்.
மேலும், நிலச்சரிவு காரணமாக, மீட்புப் பணியாளர்கள், சம்பவ இடத்திற்குச் செல்ல, சிரமங்களை எதிர்கொண்டதாகவும், அவர் கூறினார்.
காணாமல் போனவரின், அடையாளம் இன்னும், தெரியாத நிலையில் தேடுதல், மீட்புப் பணிகள், தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




















