ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து அன்பழகனை வெட்டி கூறு போட்டது

“கொஞ்சம் வீடு வரைக்கும் வர்றியா?” என்று காதலி கூப்பிடவும் ஆசை ஆசையாக பார்க்கச்சென்றார் அன்பழகன். ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து கொண்டு, அன்பழகனை வெட்டி கூறு போட்டுள்ளது. இந்த சம்பவம் சிதம்பரத்தையே உலுக்கி உள்ளது.

சிதம்பரத்தை சேர்ந்த அன்பழகன் வயது 21. இவர் சொந்தமாக ஒரு பைக் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியும் அன்பழகனை விரும்பினார். ஒரு வருடமாகவே இந்த காதல் வளர்ந்து வந்துள்ளது.

இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போட்டுவிட்டனர். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால், காதலியை பார்க்க முடியாமல் அன்பழகன் தவித்துவிட்டார். அதனால் அவர் வீட்டு பக்கம் அடிக்கடி சென்று வந்தார். இதை பார்த்த மாணவியின் பெற்றோர் அன்பழகனை எச்சரித்தனர். எப்போழுது பார்த்தாலும் வீட்டு பக்கமே சுற்றி கொண்டிருந்ததால் சிதம்பரம் போலீசிலும் புகார் தந்தனர்.

அப்போதும் அன்பழகன் அடங்கவில்லை. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தன் வீட்டுக்கு வருமாறு மாணவி, அழைத்திருந்தார். இதனால் ஆசை ஆசையாக காதலி வீட்டுக்கு சென்றார் அன்பழகன். இதனிடையே, காலையில் போன மகன், சாயங்காலம் ஆகியும் திரும்பி வராததால், சந்தேகமடைந்த அன்பழகனின் பெற்றோர் மாணவியின் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

அப்போதுதான் அன்பழகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அலறினர். போலீசில் புகாரும் தந்தனர். உடனடி விசாரணை ஆரம்பமானது. அதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியது. அதில், வீட்டில் பெற்றோர் கண்டித்ததால், சில நாட்களாகவே அன்பழகனிடம் பேசுவதை மாணவி தவிர்த்து வந்துள்ளார்.

வழக்கமாக காதலிக்கு அன்பழகன்தான் செல்போன் ரீசார்ஜ் செய்துவிடுவாராம். காதலி பேசாவிட்டாலும் அவருக்காக இந்த மாசமும் ரீசார்ஜ் செய்ய போவதாக சொல்லி உள்ளார் அன்பழகன். அதற்கு மாணவியோ, இனிமேல் தனக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என்று சொல்லவும், ஆத்திரம் வந்து அன்பழகன் அவரை அடித்துவிட்டார்.

இந்த விஷயத்தை மாணவி தன் பெற்றோரிடம் சொல்லி உள்ளார். அதனால் அன்பழகனை கொலை செய்ய குடும்பமே தயாராகியது.. அதன்படி, அன்பழகனை வீட்டுக்கு வர சொல்லி மறைந்து கொண்டனர். காதலி வரசொன்னதால் வீட்டுக்குள் நுழைந்தார் அன்பழகன். அங்கே அவரது பெற்றோர், மாணவியின் 17 வயது அண்ணன் உட்பட எல்லாருமே இருக்கவும் ஒன்றும் புரியாமல் விழித்துள்ளார்.

அப்போது காதலை கைவிடும்படி அவர்கள் வார்னிங் செய்தனர். ஆனால் அன்பழகன், எல்லார் முன்னிலையிலும் மாணவியை காதலிப்பதாக சொல்லி உள்ளார். அப்போது அது தகராறாக உருவெடுத்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த 3 பேரும் அன்பழகனை கத்தியால் சரமாரியாக தலையில் வெட்டி சாய்த்தனர். இதில் அங்கேயே சுருண்டுவிழுந்து உயிரிழந்தார் அன்பழகன்.

பிறகு பிணத்தை அங்கிருந்து அகற்றுவதற்காக அவரது கைகளை கட்டிவிட்டனர்.. எப்படி அப்புறப்படுத்துவது என்று யோசித்து கொண்டிருந்தபோதுதான், அன்பழகன் பெற்றோர் அங்கு வந்துவிட்டனர். இப்போது அந்த மாணவி உட்பட 4 பேருமே கைதாகி உள்ளனர். பெற்றோரை கடலில் ஜெயிலில் அடைத்துள்ளனர். அண்ணன் – தங்கையை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். இளைஞனை வெட்டி கூறு போட்டதில், குடும்பமே இன்று ஜெயிலுக்கு உட்கார்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here