டான்ஸ்ரீ மூசா அமான் விடுதலை – சபாவில் ஆட்சி மாற்றமா?

சபா முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான், 46 இலஞ்ச ஊழல், கள்ளப் பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

வெட்டுமர குத்தகை வழங்குவது தொடர்பில் இந்த குற்றங்களை புரிந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்த மூசான் அமான் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அரசுத் தரப்பு வழக்கறிஞர் டத்தோ அஹார் அப்துல் அமிட் மீட்டுக் கொள்வதாக முன்வைத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் ஜாமில் உசேன் விடுதலை செய்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வெட்டுமர குத்தகை வழங்குவது தொடர்பில் 24 கோடியே 30 இலட்சம் வெள்ளி இலஞ்சம் பெற்றதாக

2009 ஆண்டு இலஞ்ச ஒழிப்பு இலக்கா சட்டம், 11(ஏ) விதியின் கீழ் 30 குற்றச்சாட்டுகளும் 2019 ஆண்டு மார்ச் மாதம் கள்ளப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக 16 குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமர்த்தப்பட்டிருந்தது.

கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தேசிய முன்னணி, தனி நன்கொடையாளர்கள் வழங்கிய அரசியல் நிதியை இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என மூசா அமானின் வழக்கறிஞர் அமீர் ஹம்சா அர்ஷாட் தனது வாதத்தை முன்வைத்தார்.

டான்ஸ்ரீ மூசா அமான் விடுதலை சபாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சபா முதலமைச்சராக இருக்கும் டத்தோஸ்ரீ ஷப்பி அப்டால் துன் டாக்டர் மகாதீர் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here