கோவிட் 19 பெருந்தொற்றுக்கு இன்று 8 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
8 பாதிப்புகளில் 2 பாதிப்பு வெளிநாட்டிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். 4 பாதிப்புகள் அந்நிய பிரஜைகளுக்கு ஏற்பட்ட தொற்றாகும். 2 பாதிப்பு மலேசியர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றாகும்.
இன்று 35 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,346ஆக பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,453ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 986ஆக இருக்கும் வேளையில் யாருக்கும் சுவாச உபகரணங்கள் தேவைபடவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121ஆக அதிகரிதுள்ளது.