பிறை ஆற்றின் நீர்க்குழாயில் ஏற்பட்ட கசிவு; சீரமைப்பு பணிகள் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே முடிக்கப்பட்டன

ஜார்ஜ் டவுன்:

பிறை ஆற்றின் நீர்க்குழாயில் ஏற்பட்ட கசிவினை சரிசெய்யும்வகையில், அங்கு இரண்டு புதிய 600மிமீ நீர்க்குழாய்களை இணைக்கும் சீரமைப்பு பணிகள் திட்டமிட்டதை விட சீக்கிரமாகவே முடிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் புதிய குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளதாக பினாங்கு நீர் வழங்கல் கழகம் (PBAPP) தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்ட 120,000 நுகர்வோரில் 84 விழுக்காடு மக்களுக்கு நீர் விநியோகத்தை திட்டமிட்ட காலத்திற்கு முன்பே, மீண்டும் விநியோகிக்கப்படும் என்று PBAPP தெரிவித்துள்ளது.

பினாங்கின் தென்மேற்கு மாவட்டத்திலும் வடகிழக்கு மாவட்டத்தின் ஒரு பகுதியிலும் சுமார் 120,000 நுகர்வோர் நேற்று இரவு முதல் மீண்டும் ஒரு சுற்று நீர் விநியோகத் தடையை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்களன்று, பிளான் B க்கான வேலைகள் முடிவதற்கு 16 மணிநேரம் ஆகும், அது இன்று மதியம் 2 மணிக்கு முடிவடையும், என்றும் முதல்வர் சௌ கோன் இயோவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here