விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஜெர்மனியில் ஆண்டுதோறும் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அவர் நடித்த படங்களை திரையிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில், இந்தாண்டு பிகில் படத்தை அரசாங்க நிபந்தனைகளுடன் திரையிட உள்ளனர். பிரான்சில் வருகிற ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பிகில் படம் திரையிடப்பட உள்ளது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.