மக்கள் ஓசையால் பல உதவிகள் கிடைத்தது – மனம் நெகிழ்ந்தார் கோகிலா

வேலை இல்லாமல் வறுமையின் பிடியில் 6 பிள்ளைகளுகடன் கோகிலா வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

அவர் படும் சிரமங்கள் குறித்து மக்கள் ஓசை நாளிதழில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பின்னர் ஏராளமானோர் அவருக்கு உதவவிகளை வழங்கியுள்ளனர்.

மக்கள் ஓசையின் செய்தியால் தான் தமக்கு பல உதவிகள் கிடைத்து வருகிறது என்று அவர் மனம் நெகிழ்ந்தார்.

இவர் சினிமா தியேட்டரில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். கோவிட் 19 காரணமாக தியேட்டர்கள் இன்று வரை திறக்கப்படவில்லை. இதனால் வருமானம் இல்லாமல் தத்தளித்துள்ளார்.

வருமானம் இல்லாமல் போனதால், குடும்ப செலவுக்கு பணமில்லை. அதலால் பிள்ளைகளுக்கு முறையான சாப்பாடு இல்லை. ஆறு பிள்ளைகள் இருவர் பால் குடிக்கும் குழந்தைகள். அவர்களுக்கு பால் மாவு கூட இல்லை.

அந்த இரு குழந்தைகளில் ஒருவருக்கு முதுகு தண்டு எலும்பில் பிரச்சனை. மருத்துவர் ஆலோசனைப்படி அவருக்கு அதிக சத்துள்ள பால் மாவு உணவாக தர வேண்டும். அந்த பால் மாவின் விலை அதிகம். வாங்க சிரமமாகவுள்ளது.

கோவிட்-19 பாதிப்பின் போது சிலர் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்கள். ஆறு பிள்ளைகள் என்பதால் கிடைக்கும் பொருட்கள் விரைந்து முடிந்துவிடுகிறது.

மாத வீட்டு செலவு ஆயிரம் வெள்ளிக்கு மேல் தேவைப்படுகிறது. வீட்டு வாடகை மாதம் வெ.280, தண்ணீர் மற்றும் மின்சார கட்டணம் மாதம் வெ.50, இரு குழந்தைகளுக்கு பால்மாவு, பெம்பஸ் இதர பொருட்கள் வெ.600 மற்றும் சமையல் பொருட்கள் வெ.500 என தேவைப்படுகிறது.

மேலும் இங்கு ஜாலான் திமியாங் ஆற்றோரமாக இவ்வீடு அமைந்துள்ளதால், மழைக் காலங்களின் போது வெள்ளம் ஏற்படுகிறது. அதுவொரு பக்கம் பயமாக இருக்கும் வேளையில், மற்றொரு புரம் இரவு நேரங்களில் பாம்புகளின் தொல்லை எங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கோகிலா கூறினார்.

வீட்டின் கழிவு நீர் செல்ல முறையான கால்வாய் வசதி இல்லாத சூழ்நிலையில், கழிவு நீர் தேக்கம் ஏற்பட்டு, தூற்நாற்றம் வீசுகிறது. மேலும் ஏடிஸ் கொசுக்களின் கடிகளுக்கும் நாங்கள் ஆளகிறோம் என மன வேதனையுடன் கூறினார்.

இழந்த வேலை மீண்டும் கிடைக்காமல் போகலாம், வருமானம் இல்லாமல் எப்படி குடும்ப செலவை பார்க்ப்ப் போகிறேன், பிள்ளைகளை எப்படி வளர்க்கப் போகிறேன் என்று தெரியவில்லை என கண் கலங்கினார்.

இவரின் நிலை அறிந்த மக்கள் ஓசை அவருக்கு உதவ முன் வந்தது. அவரின் சிரமம் குறித்து செய்தி வெளியிடப்பட்டது. அதன் மூலம் அவருக்கு பல்வேறு உதவிகள் கிடைத்துள்ளது.  அதோடு மக்கள் ஓசையின் டிஜிட்டல் குழு நேரடியாக அவரின் வீட்டிற்குச் சென்று அவர்கள் வாழும் சுழலை நேரலை மூலம் மக்கள் காட்டியதுடன் சில பொருள் உதவிகளையும் வழங்கியது.

தட்டு தடுமாறும் இந்த குடும்பத்திற்கு நிதி அல்லது பொருள் உதவி வழங்க விரும்புவர்கள் 011-26279445 என்ற எண்ணில் கோகிலவுடன் தொடர்புக் கொள்ளலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here