சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே தும்பல்பட்டியில் மர்மப்பொருள் வெடித்து விவசாயி மணி உயிரிழந்தார்.
நிலத்தில் இருந்த ரேடியோ போன்ற பொருளை வீட்டிற்கு எடுத்து வந்த அவர், அதற்கு மின்சாரம் செலுத்தி பயன்படுத்த முயன்றபோது வெடித்ததாக தெரிய வந்துள்ளது.
மேலும் மர்மப்பொருள் வெடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.