ஒரு கை ஓசை

ஒரு கையால் எழுப்பும் ஓசை ஒசையாக இருக்காது, இரு கைகளும் சேர்ந்து எழுப்பும் ஓசை இசையாகவும் இருக்கும், உற்சாகத்தைக் கொடுக்கும் மருத்துவ ரீதியாகவும் உதவும். ஒன்றை வெற்றிகரமாக ஆக்க பலரின் பின்புலம் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. அப்படி அமைந்தால் வெற்றி இலகுவாகும்.

இதைத்தான் மலேசியாவும் இந்தோனேசியாவும் பின்பற்றுகின்றன. இதனால் அதிக நன்மை கிடைக்கும் என்பதில் ஆழமாக இறங்கியுள்ள.

நாட்டின் சுற்றுலாத்துறை எழ முயற்சித்திருக்கிறது. எழுவதற்கு வழிகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. ஆனாலும் நட்பு நாடுகளும் இதற்குச்சாதகமாக இல்லாவிட்டால் சுற்றுலாத்துறை வெற்றிபெற வாய்ப்பில்லை.

மலேசியா இந்தோனேசியா இரு நாடுகளும் இதை உணர்ந்திருக்கின்றன. முதலில் சுற்றுலா பாதிப்பின் தடைகள் அறியப்படவேண்டும். தடைகல் அகன்றால்தான் செயல் வெற்றியளிக்கும். அதைத்தான் இருநாடுகளின் சுற்றுலாத்துறை கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது என்று கூறுகிறார் சுற்றுலா, கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி ஷுக்ரி.

சுற்றுலாத்துறை என்பதில் வலுவான பொருளாதார மீட்சியும் இருக்கிறது. தூரத்து நாடுகளை விட அருகில் உள்ள மும்முனை நாடுகள் ஒத்துழைப்பாய் இருந்தால் சுற்றுலாத்துறையில் வெற்றி வெற முடியும் அதற்கு முன் நட்பு நாடுகள் நோய்த்தொற்றை ஒழிக்க எஸ்.ஓ.பி எனும் நடைமுறை ஒழுக்க செயல்முறையை பின்பற்ற வேண்டும்.

மலேசியாவும் இந்தோனேசியாவும் இதற்கான ஒத்துழைப்பில் கவனமாக இறங்கி யிருக்கின்றன.

நட்பு நாடுகளின் சுற்றுலா விரிவடைந்தால் பொருளாதாரம் உயரும் விடுதித்தொழில்கள் எழுச்சிபெறும். வேலைவாய்ப்புகள் நிலைபெறும்.

மறுமலர்ச்சியை நோக்கிப்போய்க்கொண்டிருக்கும் வேளை மக்களின் ஒத்துழைப்பும் இணைந்தே வரவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here