தந்தையருக்கு சேமிப்பு முக்கியம் – டத்தோஸ்ரீ நாயர்

தந்தையர் அனைவரும் யாரையும் சார்ந்து தனது கடைசிக் காலத்தை நம்பி இல்லாமல் அவர்களுக்கென்று ஒரு சேமிப்பை வைத்துக் கொள்வது அவசியம் என்று இன்று கொண்டாடப்படும் தந்தையர் தினத்தில் டத்தோஸ்ரீ ஜி.வி. நாயர் கூறினார்.

தங்களுக்கென்று ஒரு சேமிப்பை வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ வேண்டும். கடைசி காலத்தில் தங்களுக்கென்று ஒரு சின்ன சேமிப்பு, ஒரு சின்ன இடம், அதுவும் பிள்ளைகளுடன் சேர்ந்திருந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் கிடையாது.

இப்பொழுது நாம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். தந்தைமார்களைக் கைவிடும் பிள்ளைகள் உங்கள் எதிர்காலத்தையும் சிறிது சிந்தித்துப் பாருங்கள்.

நாளை உங்கள் பிள்ளைகள் உங்களைக் கைவிட்டால் அப்பொழுதுதான் தந்தையின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள் என்று அவர் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து தந்தையருக்கும் மனமார்ந்த தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தந்தையாகவிருக்கும் இளைஞர்களுக்கும் தந்தையர் தின வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here