சீனாவுக்கான இந்திய தேயிலை ஏற்றுமதி 1.27 கோடி கிலோவாக அதிகரிப்பு

சீனாவுக்கான இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 1.27 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

காமன்வெல்த் நாடுகளுக்கு (சிஐஎஸ்) இந்தியா அதிக அளவில் தேயிலை ஏற்றுமதியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த நிதியாண்டில் இந்த நாடுகளுக்கான இந்திய தேயிலை ஏற்றுமதி 5.94 கோடி கிலோவாக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த 2018-19 நிதியாண்டில் இந்த நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி 6.07 கோடி கிலோவாக அதிகரித்து காணப்பட்டது.

உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்திய தேயிலை ஏற்றுமதி அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இருப்பினும், இந்தியாவிலிருந்து அதிக அளவில் தேயிலையை இறக்குமதி செய்து கொள்வதில் தொடா்ந்து இரண்டாவது இடத்தில் உள்ள ஈரானுக்கான ஏற்றுமதி 4.10 கோடி கிலோவிலிருந்து 4.64 கோடி கிலோவாக உயா்வைக் கண்டுள்ளது.

அதேபோன்று, சீனாவுக்கான தேயிலை ஏற்றுமதியும் 1.05 கோடி கிலோவிலிருந்து 1.27 கோடி கிலோவாக கணிசமாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், அண்டைநாடான பாகிஸ்தானுக்கான தேயிலை ஏற்றுமதி 1.46 கோடி கிலோவிலிருந்து 33 லட்சம் கிலோவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

ஒட்டுமொத்த அளவில் கடந்த நிதியாண்டில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 25.45 கோடி கிலோவிலிருந்து 5.6 சதவீதம் சரிந்து 24 கோடி கிலோவானது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here