கோலாலம்பூர்: தாமான் மெலாவதியில் உள்ள இரவு கடையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) கார் மோதியதில் உணவகம் பலத்த சேதமடைந்தது. இரவு 8.30 மணியளவில், டிரைவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து, லோராங் பேராக் அமைந்துள்ள கடைக்குள் கார் ஒன்று மோதியது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது, எனது நண்பர் ஜெய் கடையில் இருந்தபோது நான் வீட்டில் இருந்தேன். கடைக்குள் ஒரு கார் மோதியதாக அவர் எனக்குத் தெரிவித்தார் என்று உணவகத்தின் உரிமையாளர் 60 வயதான ஓத்மான் அகமது கூறினார். ஓத்மான் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, கடையின் தூண் உடைந்திருப்பதைக் கண்டேன் மேலும் கார் மோதிய விபத்து காரணமாக பல மேசைகள் மற்றும் நாற்காலிகள் உடைந்து கிடந்தன.
“இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் கடவுளுக்கு இவ்வேளையில் நன்றி” என்றும் அவர் மேலும் கூறினார். இதற்கிடையில், அம்பாங் ஜெயாவின் துணை ஆணையர் மொஹமட் அசாம் இஸ்மாயில் இந்த சம்பவத்தை உறுதிசெய்ததோடு மலேசியரான அந்த வாகனமோட்டி விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.