புதிய கோரோனா கட்டணம்

வெளிநாட்டிலிருந்து திரும்பும் மலேசியர்கள் இன்று முதல் நாட்டிற்குள் நுழைந்தவுடன் கோவிட் -19 க்கு சோதனை செய்ய 30 வெள்ளி முதல் 150 வெள்ளிவரை செலுத்த வேண்டும். அதே நேரத்தில் குடிமக்கள் அல்லாதவர்கள் மீதான சோதனைக்கு அதன் வகையைப் பொறுத்து கட்டணம் செலுத்துவார்கள் என்று அரசாங்க அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.

ஜூன் 26 ஆம்நாள் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகள் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருதாகத்தெரிவித்திருக்கிறது. தொற்று நோய்களைத் தடுப்பது  கட்டுப்படுத்துதல் (2019 கோவிட் -19) கண்டறிதல் சோதனை) விதிமுறைகள் 2020 என  இப்புதிய முறை அழைக்கப்படும்.

சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஆடாம் பாபா விதித்த விதிமுறைகளில், மலேசியாவிற்குள் நுழையும் எந்த மலேசிய அல்லது வெளிநாட்டவரும் எந்த நேரத்திலும் குடியேற்ற அனுமதிக்கு முன் எடுக்கப்பட்ட கோவிட் -19 கண்டறிதல் சோதனைகளின் வகையைப் பொறுத்து குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here